வேலூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.

வேலூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா.
X
வேலூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பரமத்தி வேலூர், மார்ச். 21: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி சாலையில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடுவிலாவுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பரமத்தி வேலூர் நண்பர்கள் குழு சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த மகா மாரியம்மனுக்கு பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பல்வேறு வகையான பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
Next Story