ஆட்சியே முடியும் தருவாயில் இருந்தும் எந்தவிதமான நலத்திட்ட பணிகளையும் செய்யாத திமுக

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியே முடியும் தருவாயில் இருந்தும் எந்தவிதமான நலத்திட்ட பணிகளையும் செய்யாத திமுக நகர மன்ற தலைவரையும் நகராட்சி ஆணையாளரையும் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூண்டோடு புறக்கணிப்பு செய்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் ஒருவருக்கும் வேலை தெரியவில்லை என நகர மன்ற தலைவர் குற்றச்சாட்டு. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அனைவரும் ராஜினாமா செய்வோம் என கவுன்சிலர்கள் எச்சரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சார்பாக உள்ள 36 வார்டுகளிலும் எந்தவிதமான நலத்திட்ட பணிகளையும் செய்யாமல் மெத்தனமாக செயல்படும் திமுக நகர மன்ற தலைவரையும் நகராட்சி ஆணையாளரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி இன்று நடைபெற இருந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மொத்தமாக புறக்கணித்து சென்றனர். அப்போது கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் ஒரு சிலர் கூறுகையில்... மாதம் மாதம் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்துவத இல்லை திடீரென எப்போதாவது திருடர்களுக்கு கொடுக்கும் தகவலை போல திடீர் திடீரென நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் நடைபெறும் அன்று காலையிலும் தகவல் கொடுக்கிறார்கள். திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் எந்த நலத்திட்ட பணிகளையும் செய்வதில்லை அது குறித்து கேட்டால் செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதி கூறி மினிட் புத்தகத்தில் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். கூட்டம் முடிந்த பிறகு அவர்களுக்கு ஏற்றார் போல் அதை எழுதிக் கொண்டு பணிகளை செய்கிறார்கள் மேலும் இதே போன்று நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் நடந்து கொண்டால் திமுகவை சேர்ந்த 23 கவுன்சிலர்களும் மற்றும் திமுக கூட்டணி கட்சி சேர்ந்த கவுன்சிலர்களும் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என எச்சரிக்கை விடுத்து அனைவரும் கோஷங்கள் எழுப்பி சிறப்பு ஆலோசனை கூட்டத்தினை புறக்கணித்து சென்றனர். அப்போது ஒரு சில கவுன்சிலர்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்தம் உள்ள 65 திருமணங்களில் 58 வது தீர்மானமான பழைய நகராட்சி கட்டிடத்தை நிறுத்திவிட்டு புதிய நகராட்சி தலைமை அலுவலகம் கட்ட சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மட்டும் தீர்மானம் நிறைவேற்ற கூட்டம் தொடர்ந்து நிலையில் வெளியே இருந்த இதர கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்து புறக்கணித்த கூட்டத்தை ஏன் மறுபடியும் நடத்துகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பதில் அளித்த நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் நகராட்சி அதிகாரிகள் ஒருவருக்கும் வேலை தெரிவதில்லை எல்லா தகவல்களையும் திடீர் திடீரென எனக்கு கொடுக்கிறார்கள் அதனால் தான் நகர மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுகிறது என நகராட்சி அலுவலர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார் அப்போது நகராட்சி ஆணையர் அருகாமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story

