கிராம சபை கூட்டத்தின் தேதி மாற்றம்

X
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23.03.2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29.03.2025 - அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கூட்டத்தில் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, 29.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்,
Next Story

