ஸ்ரீ பால முருகனுக்கு ராஜ அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..

ஸ்ரீ பால முருகனுக்கு ராஜ அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பால முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் ஸ்ரீ பால முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் முருகனை வணங்கி சென்றனர்.
Next Story