மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஏப்ரலில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டையொட்டி செந்துறையில் பிரச்சார விளக்கக் கூட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஏப்ரலில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டையொட்டி செந்துறையில் பிரச்சார விளக்கக் கூட்டம்.
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஏப்ரலில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டையொட்டி செந்துறையில் பிரச்சார விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், மார்ச்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்பரல் 2-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை நடைப்பெறுவதையொட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் பிரச்சார விளக்கக் கூட்டம் வட்ட செயலாளர் கு.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ் வாலன்டினா கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எ.கந்தசாமி ஆகியோர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அடிப்படை பிரச்சினைகள், குறைகள் குறித்து பேசினர். வட்டக்குழு உறுப்பினர்கள் பி.அழகுதுரை, இ.பன்னிர்செல்வம். ஜி.செண்பகவள்ளி, சீமான் .மு.,கருப்பையா, எம்.செல்வராசு,  செந்துறை கொளஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாசன வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் 1-க்கு 3 ரூபாய் ஊக்க தொகையும், லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும், முந்திரி கொட்டைக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்,  இரும்புலிக்குறிச்சி, செந்துறை, பொன்பரப்பி போன்ற விடுதிகளுக்கு காப்பளர்கள் நியமிக்கப்பட வேண்டும், நெசவாளர் நலவாரிய பயன்கள் காலதாமதப்படுத்தால் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது முடிவில் முன்னனி நிர்வாகி முருகானந்தம் நன்றி கூறினார்.
Next Story