ஆரணி கிராமிய போலீஸார் தாக்கியதில் வாலிபர் கால்கள் முறிவு.

ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி ஆரணி கிராமிய போலீஸார் வாலிபரை தாக்கி வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றபோது இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஆரணி, ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி ஆரணி கிராமிய போலீஸார் வாலிபரை தாக்கி வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றபோது இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் சுப்பிரமணி மகன்கள் பரசுராமன்(45), பாஸ்கரன்(42) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னுசாமிபிள்ளை மகன் கன்னியப்பன்(60) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இருவரும் தகராறு செய்துகொண்டு தாக்கிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆரணி கிராமிய போலீஸில் பரசுராமன் என்பவர் கன்னியப்பன் மீது புகார் கொடுத்தார். மேலும் கன்னியப்பன் என்பவர் பரசுராமன் மீது புகார் கொடுத்தார். இதனால் ஆரணி கிராமிய போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கன்னியப்பனின் ஆதரவாளரான திமுக பிரமுகர் அழுத்தம் கொடுத்ததின்காரணமாக ஆரணி கிராமிய எஸ்.ஐ அருண்குமார், போலீஸார்கள் வெங்கடேசன், செல்வம், வேலு ஆகியோர் பரசுராமன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பரசுராமன் இல்லாததால் அவரது தம்பி பாஸ்கரன் அருகே உள்ள பாஸ்கரன் வீட்டிற்கு சென்று பாஸ்கரனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரணி கிராமிய போலீஸார் பாஸ்கரனை படிக்கட்டில் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால் பாஸ்கரனின் இரண்டு கால்களும் முறிவு ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.மேலும் ஆரணி கிராமிய போலீஸார் தாக்கி கால் முறிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது. மேலும் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பாஸ்கரன் பேசிய வீடியோ ஆரணி முழுவதும் வைரலாகி பரபரப்பாக உள்ளது.
Next Story