பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்திட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரில் முறையீடு

பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்திட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரில் முறையீடு
X
கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: கரம்பயத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி- சித்திரை மாதங்களில் 10 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவில் பால்குடம், காவடி எடுத்தல், தேரோட்டம், முத்துப்பல்லக்கு, வாணவேடிக்கை கிடாவெட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். இதில், பல ஆண்டுகளாக பாரம்பரியமாக ஒவ்வொரு வகையாறக்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்து அதற்கான மண்டகப்படி நடத்தப்படும். இதற்கு அழைப்பிதழ் அச்சிட்டு விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் முத்துமாரியம்மன்கோயில் செயல் அலுவலர், ஆண்டு திருவிழாவை அச்சிட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே, 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வரும் ஆண்டுத்திருவிழாவை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், நீதிமன்ற உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Next Story