சிட்டுக்குருவிகளுக்கு வாழிடங்கள் தேவை'

X
அரியலூர், மார்ச் 21- சிட்டுக்குருவிக்கு வாழிடங்களை அமைத்துத் தர அனைவரும் முன்வரவேண்டும் என்றறார் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன். அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவர்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றற சிட்டுக்குருவி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியது: நாம் வசிக்கும் இடங்களில் சிட்டுக்குருவிகள் சாதாரணமாகக் காணப்பட்டன. ஆனால் தற்போது மாசு, பசுமை இழப்பு, நவீன கட்டுமானங்கள் ஆகியவற்றறால் இந்த சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை மிகவும் குறைறந்து வருகிறறது. கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதிலும், புவியியல் அமைப்பைச் சீராக வைப்பதிலும் சிட்டுக்குருவிகள் உதவுகின்றறன. அதேவேளையில் பள்ளி மாணவர்கள் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும்.இது சிட்டுக்குருவி எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றறார். பின்னர் தாவரங்களை வளர்க்கும் உபகரணங்களை அவர் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் , பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச் செல்வி, ஆசிரியர்கள் தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், பாலமுருகன், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

