கொற்கைப் பகுதியில் அமையும் கால்நடை பராமரிப்பு பண்ணை

கொற்கைப் பகுதியில் அமையும் கால்நடை பராமரிப்பு பண்ணை
X
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொற்கை பகுதியில் அமையப்படும் கால்நடை பராமரிப்பு பண்ணையினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொற்கை கிராம மாட்டுப் பண்ணையில் உள்ள மாடுகள் மற்றும் கன்றுகளை பார்வையிட்டு அதற்கு தேவையான தீவனங்கள் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story