அரசுப்பள்ளியில் உலக வன நாள் தினம்

காடுகளைப் பற்றி விரிவாக பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உலக காடுகள் தினத்தை முன்னிட்டு இன்று 21-03-2025 உலக வன நாள் தினம் கொண்டாடப் பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி உலக வன நாள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றார். காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். வனங்களைப் பாதுகாப்போம் , வளங்களைப் பெறுவோம். என்றார். வனச்சரக அலுவலர் Dr.M. சங்கரேஸ்வரி காடுகளைப் பாதுகாப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார். வன அழிப்பின் தீமைகளை விளக்கினார். பருவநிலை சீராக வைத்திருக்க காடுகள் உதவுகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. உயிரினங்களுக்கு வாழ்விடம் அளிக்கின்றன. வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது.காடுகளின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். வனவர் இராமர், வனக் காப்பாளர் ஜீவிதா முன்னிலை வகித்தனார். வனக்காவலர் மணிவண்ணன், வனக்காப்பாளர் கனிமொழி , நேரு யுவகேந்திரா MTS வீரமணி, MYV இந்துஜா, ஆசிரியர்கள் சின்னசாமி, பாலச்சந்திரன் சிலம்பரசி, அருணா, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நாளின் நினைவாகமரம் நடப்பட்டது. ஆசிரியர் செல்வராணி வரவேற்புரை ஆற்றினார்.வனக்காப்பாளர் செல்வகுமாரி நன்றி கூறினார். நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
Next Story