பெரம்பலூர்: ஆர்.ஓ. வாட்டர் மிஷன் வழங்கல்

மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் விடுதி காப்பாளினிகளிடம் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் விடுதி காப்பாளினிகளிடம் வழங்கினார். மேலும் குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை (RO) விடுதிகளில் முறையாக பராமரித்து மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட அறிவுறுத்தினர்.
Next Story