காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
நெல்லியாளம் அருகே சாமியார் மலை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் அருகே உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டுத்தெடுப்பு காவலர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்...... நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் அருகே உள்ள சாமியார் மலை பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பின் அருகே ஒற்றை ஆண் காட்டு யானை உலா வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளில் சுற்றி வந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராடி பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் நிம்மதி அடையந்தனர். இந்த நிலையில் கிராம பகுதியில் உலாவரும் காட்டிய யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story




