மேம்பாலத்தின் கீழ் சாலைப் பணிகள் துவக்கம்

X
மார்த்தாண்டம் நகரில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு முதல் பழைய தியேட்டர் சந்திப்பு வரை இன்டர் லாக் போட முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் ஜேசிபி எந்திரம் மூலம் பழைய தார் சாலையை அகற்றும் பணி தொடங்கியது. இதன்பிறகு ஜல்லி போட்டு இன்டர்லாக் போடப்பட உள்ளது. இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பணியாளர் பொறியாளர் சரசு, உதவி இன்ஜினியர் வித்யா தலைமையில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு முதல் காந்தி மைதானம் வரை ஒருவழிப்பாதையில் இன்டர் லாக் முழுமையாக போட்ட போடப்பட்ட பிறகு அடுத்த தடத்தில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேம்பாலம் வழியாக வாகனங்கள் அனைத்தும் விடப்பட்டுள்ளது.
Next Story

