சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

X
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி அழகிய மண்டபம் தனியார் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. நகரத் தலைவர் அன்சாரி தலைமை வகித்தார். திருவிதாங்கோடு பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் ராபி வரவேற்றார். மாவட்ட தலைவர் சுல் பீகர் அலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலை நிர்வாகிகள், மருத்துவ சேவை, தனி வர்த்தகம், பொறியாளர், கல்வியாளர் மற்றும் வேளாண்மை அணியினர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பைசல் அகமது, மாவட்ட பொது செயலாளர் முகைதீன் நாகூர் மீரான், மாவட்ட பொருளாளர் ஜாஹிர் உசேன், பத்மநாபபுரம் தொகுதி தலைவர் அப்துல் ரசாக் மற்றும் மாவட்ட அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், பாதிரியார்கள் ஜார்ஜ் பொன்னைய்யா, சாமுவேல் சமூக சேவகர் கருங்கல் ஜார்ஜ், திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் தலைவர் அன்வர் உசேன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

