கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழா நாளை துவக்கம்

கொல்லங்கோடு  பத்ரகாளி அம்மன் கோவில் விழா நாளை துவக்கம்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. வருடம் தோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. குழந்தை குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தும் போது குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.       இந்த நிலையில் இருந்த வருட தூக்கத் திருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  நாளை மாலையில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் குத்து விளக்கேற்றி இந்த விழாவை துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய திருஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு சமய சொற்பொழிவு ஆற்றுகிறார். கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார்,  விஜய் வசந்த் எம் பி  உட்பட ஏராளமானவர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடக்கிறது.
Next Story