பா ஜ சார்பில் வீடுகளில் கருப்பு கொடி போராட்டம்

X
தமிழகத்தில் மது கடைகளை ஒழிக்க வேண்டும்,பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அந்த வகையில் குமரி மாவட்ட பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர்.முத்துராமன் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையில் உள்ள அவரது இல்லம் முன்பு வேண்டாம், வேண்டாம் மதுக்கடைகள் வேண்டாம் என்ற கோஷமிட்டு கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அப்பகுதி சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

