இலவச பட்டா : கலெக்டர் ஆய்வு

இலவச பட்டா : கலெக்டர் ஆய்வு
X
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தெங்கம்புதூர், தோவாளை வட்டத்திற்குட்பட்ட அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதி மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று  நேரில் சந்தித்து கலந்துரையாடி கூறியதாவது:-       தமிழ்நாடு அரசு 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையில்லா அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு இலவச கணினி வீட்டுமனை பட்டா வழங்க ஆணையிட்டுள்ளது.        அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தெங்கம்புதூர், தோவாளை வட்டத்திற்குட்பட்ட அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலத்தினை ஆக்கிரமித்து குடியிருப்பு அமைந்துள்ள நிலமில்லாதவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி இலவச கணினி பட்டா வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு,  குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது. அவர்களில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது.  என கூறினார்.       ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story