பெரம்பலூரில் தந்தை பெரியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு நிறைவு விழா.
பெரம்பலூரில் தந்தை பெரியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு நிறைவு விழா. பெரம்பலூர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் மழலையர் தொடக்கப் பள்ளியில் கலை இலக்கிய உடற்றிறப் போட்டி விழா! மற்றும் ஆண்டு நிறைவு விழாவானது, அப்பள்ளியின் தாளாளர் ஒவியச்செம்மல், முனைவர் கி.முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.தங்கராசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; பள்ளியின் தாளாளர் அவர்கள் ஏன் பெரியார் பெயரில் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்பவர்களின் கவனத்திற்கு, தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியராக இருந்த காலத்திலேயே பெரம்பலூர் நகரங்களுக்கு தந்தை பெரியாரை அழைத்து வந்து மக்கள் மத்தியிலே பகுத்தறிவு கருத்துக்களை பேச வைத்த ஒரு சிறப்பு வாய்ந்த தாளாளரைதான் நாம் பெற்றிக்கின்றோம். முகுந்தன் அய்யா ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த காலங்களில் தந்தை பெரியாரின் கொள்கையுடன் திமுக துண்டு அணிந்து தான் பள்ளிக்கு செல்வார். 1971 இல் சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பினால் அடித்த நிகழ்ச்சியில் கூட பங்கேற்று ராமர் படத்தினை செருப்பால் அடித்துள்ளார். ஆக அவரின் ஆசிரியர் பருவத்தில் கூட பெரம்பலூர், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு போராடி இருக்கிறார் ஓவியச் செம்மல் அய்யா அவர்கள். இதனால் அவரின் ஊதிய உயர்வு கூட தடைபட்டது அப்படிப்பட்ட பெரியாரின் மேல் பற்று கொண்ட காரணத்தினால் தான் தந்தை பெரியார் மழலையர் தொடக்கப் பள்ளியினை 2013 - இல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி ஐயா திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டு 12 ஆண்டு காலமாக எந்த ஒரு அவப்பெயரையும் பெற்றிடாமல் சிறந்து விளங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுமட்டுமல்லாமல் தந்தை பெரியார் சிலையை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் முதன் முதலில் நிறுவியவரும் அவரே, அதனைத் தொடர்ந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அன்றைய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய சிலையை உருவாக்கி தந்தை பெரியாருக்கு பெருமை சேர்த்துள்ளார். எனவே தந்தை பெரியாரின் பெயரில் நிறுவப்பட்ட இந்த தொடக்கப் பள்ளியானது வருகின்ற காலகட்டங்களில் உயர்நிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாகவும் வளர்வதற்கு ஆசிரியர் பெருமக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து குழந்தை செல்வங்களும் கல்வியினை சிந்தாமல் சிதறாமல் கற்க வேண்டும் என்றும் கூறினார். இந்த விழாவில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் விஜயேந்திரன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், வழக்குரைஞர் சேகர், தலைமையாசிரியர் கொளஞ்சியப்பன், ஆசிரியர் சுதாகரன் உள்ளிட்ட உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story




