வில்லிசை கலைஞருக்கு விருது வழங்கல்

வில்லிசை கலைஞருக்கு விருது வழங்கல்
X
நாகர்கோவில்
ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் எஸ்.கே.எம். ஹாலில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட  சிறந்த வில்லிசை கலைஞர் ஐ. அகிலா லெட்சுமி (எ)ரேவதி என்பவருக்கு    "நவரத்னா கலா ஸ்ரீ விருது" வழங்கப்பட்டது.         இந்த நிகழ்ச்சியில் ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் தர்மராஜன் தலைமையில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா அருள் ஆசியுடன் முன்னாள் முதன்மை சிறப்பு சி பி ஐ நீதிபதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் தலைவர் திருநீலப்பிரசாத் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் விருதுகளை வழங்கினார்கள்.        கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், கேரளா முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., வழக்கறிஞர் எஸ். சி.மில்லர் மற்றும் கவிதாலயா நாட்டியப்பள்ளி நிறுவனர் டாக்டர் பு.நிஷா ரஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story