கன்னியாகுமரியில் புதரில் பற்றி எரிந்த தீ 

கன்னியாகுமரியில் புதரில் பற்றி எரிந்த தீ 
X
தென்னையிலும் தீ பிடித்தது
கன்னியாகுமரி அருகே மகாதானபுரம், நரி குளத்தின் கரை பகுதியில் குப்பை மற்றும் புதராக மண்டி கிடந்த பகுதியில் திடீரென  தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் பக்கத்தில் உள்ள தென்னை மரத்தின் உச்சியில் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.        தகவலின் பேரில் நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனை கவனிக்காமல்  விட்டிருந்தால் அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் தீ பரவி இருக்கும். தீயை அணைப்பதில் தீயணைப்பு துறை மிக துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story