குழித்துறை நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

X
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மார்த்தாண்டத்தில் உள்ளது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் மற்றும் அதன் தரம் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். ஆய்வின் போது குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி, மண்டல பொறியாளர் இளங்கோவன், கொல்லங்கோடு மற்றும் பத்மநாபபுரம் (பொ) ஆணையாளர் நிலவேந்தன், குழித்துறை ஆணையாளர் ராஜேஸ்வரன், நகராட்சி பொறியாளர் குரள் செல்வி, சுகாதார ஆய்வாளர்கள் கொல்லங்கோடு பிரபாகரன், குளச்சல் வேல்முத்து, குழித்துறை பத்மநாபபுரம் (பொ) ராஜசேகர் உடன் இருந்தனர்.
Next Story

