ஜெயங்கொண்டம்- தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் கர்நாடகா கேரளா முதலமைச்சர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், மார்ச்22- நாடாளுமன்ற தொகுதி மறு வரை என்ற பெயரில் தென் இந்திய மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் அந்தந்த மாநில முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் நடந்து வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட நிர்வாக சீர்கேடுகளை திசை திருப்பும் வகையில் தமிழ்நாடு அரசு கூட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் தென் மாநில முதலமைச்சர் மாநாட்டை நடத்துவது கண்டிக்கத்தக்கது மேலும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகத்தை விளைவித்து வரும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில முதலமைச்சர் வருகைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் பரமேஸ்வரி வீட்டின் முன்பு பாஜகவினர் கண்ணில் கருப்பு துணி கட்டி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிர்வாக சீர்க்காடுகளை திசை திருப்பும் வகையில் இவ்வகையான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது எனக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பாஜக தொண்டர் உடல் முழுவதும் கருப்பு கொடிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.இதில்ஒன்றிய தலைவர் பரமசிவம், முன்னாள் ஒன்றிய தலைவர் நீலமேகம் ஒன்றிய தலைவர்கள் ராஜாராம் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அன்பு செல்வன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஜெயங்கொண்டம் நகர பொருளாளர் சுகுமார், செந்துறை ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் மணவாளன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

