புதிய பேருந்து சேவை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் இரண்டு அரசு நகர பேருந்துகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் இருந்து குலையன்கரிசல் கிராம் வரை இயக்கப்பட்டு வந்த பழைய நகர பேருந்து பதில் புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுபோல் கோவில்பட்டியில் இருந்து குருவிகுளம் வரை இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்து மாற்றப்பட்டு இந்த வழித்தடத்திலும் புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இதை தொடர்ந்து இந்த இரண்டு நகர பேருந்துகளின் சேவை துவக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பெண்கள் விடியல் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நகர பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து அந்த நகர பேருந்தில் மக்களுடன் மக்களாக அமைச்சர் கீதா ஜீவன் பயணம் செய்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு போக்குவரத்து துறை தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, திமுக வட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story