விமானத்தில் பறந்த பள்ளி மாணவ மாணவிகள்
தூத்துக்குடி பண்டாரம் பட்டி பகுதியில் அமைந்துள்ளது நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் பணிபுரிந்து வருகிறார் நல்லாசிரியர் விருது பெற்றவர் சாதாரண ஏழை எளிய மக்கள் பயின்று வரும் தனது பள்ளியை டிஜிட்டல் மையமாக மாற்றி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுத் தரும் இவர் மாணவர்களுக்காக பள்ளியில் தனது சொந்த செலவில் பல்வேறு புதிய கட்டிடங்களை கட்டி மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறார் இந்நிலையில் இன்று தனது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள், இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேர், இரண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் உட்பட 20 பேர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கிளம்பி சென்றனர். சென்னையில் இறங்கும் அவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சென்று, அங்கே பகல் முழுவதும் மிருகங்களை பார்த்துவிட்டு, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக எக்மோர் வந்து அங்கிருந்து இன்று இரவு முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் கிளம்பி நாளை காலை தூத்துக்குடி திரும்புகிறார்கள். மாணவர்களின் விமான கனவு மற்றும் சென்னை கனவை நிறைவேற்ற ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1,50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், மிருக காட்சியையும் பார்க்க வைக்க நடவடிக்கை எடுத்து இருப்பது, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. .
Next Story




