விசிக சார்பில் தோகைமலை மேற்கு ஒன்றிய முகாம் செயற்குழு கூட்டம்

10 ஆவது ஊராட்சியாக தெலுங்குபட்டியில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்
கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோகைமலை மேற்கு ஒன்றிய முகாம் செயற்குழு கூட்டம் 10-ஆவது ஊராட்சியாக பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டியில் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முகாம் பொறுப்பாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு, மாவட்ட பொருளாளர் அவினாசி மற்றும் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, முகாம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துகொண்டு கட்சியை வலுப்படுத்தவும், மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சக்திவேல், சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் லெட்சுமணன், மாவட்ட அமைப்பாளர் பாலகுமார், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், மாவட்ட துணை அமைப்பாளர் ராமன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு குமார், ஒன்றிய துணைச் செயலாளர் மலைவேல், ஒன்றிய அமைப்பாளர் கலைவாணன், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், சந்திர சேகர், மணிவேல், நடராஜ், ஸ்டுடியோ கண்ணன், ரவி, சக்திவேல், சங்கபிள்ளை வேணு, பால்ராஜ், சஞ்சய், அண்ணாதுரை, சுசிலா, சக்கரை, மகளிர் அணி நதியா மற்றும் முகாம் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story