ராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியில இடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை மனு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை மீனவர்கள் இலங்கை அரசால் சிறை படுத்தப்படுகிறார்கள். இதனால் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மீனவர்கள் பல்வேறு மாற்றுத் தொழில்களை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு அரசுகள் பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இந்நிலையில் தங்கச்சிமடம் பகுதியில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மாற்றுத் தொழில் வேண்டி ஆட்டோ ஒட்டி வருகின்றனர் இவர்கள் தங்கச்சிமடம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை தங்கள் ஆட்டோவில் இராமேஸ்வரத்திற்கு ஏற்றி, இறக்கி விடும் போது இராமேஸ்வரம் காவல்துறையால் தடுத்து, அபராதம் விதிக்கப்படுகிறார்கள். இதனால் மீனவர்கள் மாற்றுத் தொழில் வேண்டி ஆட்டோ ஓட்டும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டும் மீனவர்களுக்கு புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் தங்கச்சிமடம் பகுதிக்கு ஆட்டோ பெர்மிட் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்
Next Story



