நாகர்கோவிலில் உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு

X
. மார்ச் 22 உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரில் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் பூமியில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்து வருவதை எடுத்துரைக்கும் விதமாக இன்று உலக நீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் சோழன் திட்டை அணைக்கட்டில் இன்று ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜான் விக்டர்தாஸ் தலைமையில் நிர்வாகிகள் நீரின்றி அமையாது உலகு என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று நீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நீரின் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அடுத்த தலைமுறைக்கு நீரை அதிகரிக்க நாம் மேற்கொள்ள அரசு புதிய அணைக்கட்டுகளை உடனடியாக கட்ட வேண்டும், பழைய அணைகளை தூர்வாரி மதகுகளை சீரமைத்து மழைநீர் வடிகால் ஓடையும் சீரமைத்து தண்ணீரை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Next Story

