வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்
X
வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்
வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக வக்கீல் ஜெயந்தி மற்றும் கமலம் ஆகியோர் பணியாற்றினர். சங்கத் தலைவராக பி முருகேசன், துணைத் தலைவராக கந்தசாமி, பொருளாளராக பகவத்சிங், துணைச் செயலாளராக பாண்டியராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு மட்டுமே கடும் போட்டி நிலவியது. முன்னாள் வக்கீல் சங்க செயலாளர் பாலமுருகன், முன்னாள் வக்கீல் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. வக்கீல்கள் காலை 10 மணி முதல் தொடர்ந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Next Story