பல்வேறு அரசு திட்டப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

பல்வேறு அரசு திட்டப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை திடீர் ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-2025 கீழ் திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி விட்டம்பாளையம் பாலம் பேருந்து நிறுத்தத்தில் (பவர் ஹவுஸ் செல்லும் வழி) நிழற்கூடம் அமைக்கும் இடத்தினை பார்வையிட்டார், திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்தினை ஆய்வு செய்தார் மேலும் வணிக வளாகத்தில் இயங்கி வரும் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார், திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி ஏரியை ரூ 7.00 கோடி செலவில் தூய்மைப்படுத்தி நடைபாதை மற்றும் பூங்காக்கள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆலோசனை செய்தார், திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்கூடம் அமைக்கும் இடத்தினை தேர்வு செய்தார், திருச்செங்கோடு நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்படும் புதிய வகுப்பறை கட்டிட பணியினை ஆய்வு செய்தார், திருச்செங்கோடு நகராட்சி பழைய லாரி நிலையம் இருந்த இடத்தில் நகராட்சி சார்பாக வணிக வளாகம் கட்டும் பணியினை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார், மல்லசமுத்திரம் ஒன்றியம், பீமரபட்டியில் கிராம அறிவுசார் மையம் (சமுதாயக்கூடம்) கட்டிட பணியினை அதிகாரிகளுடன் பார்வையிட்டார், மல்லசமுத்திரம் பேரூராட்சி சந்தைபேட்டையில் நடைபெறும் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை ஆய்வு செய்தார்.
Next Story