அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி முப்பெரும் விழா:

அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி முப்பெரும் விழா:
X
அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி முப்பெரும் விழா:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி துவங்கி 106 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு, பள்ளியின் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா பள்ளியில் நடைபெற்றது. முப்பெரும் விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து முப்பெரும் விழாவை வெண்ணந்தூர் ஒன்றிய அட்மா குழு தலைவர் ஆர் எம் துரைசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கடந்த ஆண்டுகளில் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பக்தி பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பள்ளி மாணவ மாணவிகள் நடனமாடி காண்போரை அசத்தினர். இவ்விழாவில், முன்னாள் ஆசிரியர் பெருமக்களுக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடையும் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பருவத் தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பரிசு வழங்கினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பரிசு வழங்கினர். இந்த பள்ளி நூற்றாண்டு விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கே. பத்மா, பள்ளி ஆசிரியர் வ.அண்ணாதுரை, அரிமா ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுந்தரம் சிவநேசன், ரவிச்சந்திரன்,ப. தங்கவேல், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story