திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்.

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்.
X
பாண்டமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு , நிதிபகிர்வில் பாரபட்சம் ,தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து பாண்டமங்கலம்.கடைவீதியில் பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவரும்,பேரூர் கழகச் செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் தனராசு, மோகனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகழ்பிரபாகரன்,பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோமசேகர்,வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி, வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை.சுந்தர், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மூர்த்தி என்கிற முரளி, பரமத்தி வேலூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்வரன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில்.சம்பத், தலைமை கழக இளம் பேச்சாளர் பாவை.பூர்ணிமா, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நாஞ்சில் சம்பத் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்கள் ,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறார். அதேபோல் உதவித்தொகைகளையும், ஊக்கத்தொகைகளையும் அதிக அளவில் வழங்கி வருகிறார் ,பெண்களுக்கு தொடர்ந்து மாத மாதம் ரூ1000 வழங்கபட்டு வருகிறது. விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு நிதிபகிர்வில் பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி மூலம் மத்திய அரசுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் வரி பெற்றால் அந்த மாநிலத்திற்கு 2 ரூபாய் 50 பைசா கொடுக்கிறார்கள் . தமிழகத்தில் உள்ள 39 எம்பிகளில் 31 எம்பிகள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு செல்ல எம் பி தொகுதி பறிபோகும். அதே போல் மும்முனைக் கொள்கையை தமிழக அரசு கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள். மும்முனை கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்து விட்டார். இதுவரை தமிழகத்தில் இருமுனை கொள்கை மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஒன்று தாய்மொழி தமிழ் ,மற்றொன்று உலக மொழியான ஆங்கிலம். இந்த இரு மொழிகளையும் படித்தவர்கள் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்து உள்ளார்கள் .குறிப்பாக சொல்லப்போனால் இரு மொழி படித்த இறந்த போன முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் அனைவரும் மத்திய அரசுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என 1,500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Next Story