வங்கி மேலாளர் வீடு கொள்ளை கை ரேகைகள் சிக்கன

X
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர் நெல்லை மாவட்டம் களக்காடு, தமிழ்நாடு கிராம வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லிபினா (26).இவர் களியக்காவிளை தலைமை காவல் நிலையத்தில் வேலை பார்ப்பவர் சுபாஷ் வாரத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம். மனைவி லிபினா அருமனை பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து லிபினா அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் வந்த விசாரணை நடத்தினார். மேலும் கைரேகைகளை பதிவு செய்து கொண்டார்கள். இதில் இரண்டு கைரேகைகள் சிக்கி உள்ளது. இந்த கைரேகைகளை வைத்து கொள்ளையர்களை பழைய குற்றவாளிகள் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story

