பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

X
மதுரை அழகர் கோவில், லதா மாதவன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிறுவனத் தலைவர் சேர்மன் டாக்டர் மாதவன் , துணை சேர்மன் லதா மாதவன் ஆகியோர் தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் சரவணன் அவர்கள் முன்னிலையில் டீன் ஆனந்த பாண்டியன் வரவேற்புரையுடன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டக் காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா அவர்கள் மாணவ மாணவியர்கள் உங்களுடைய தாய், தந்தையரை மதியுங்கள் அவர்களே உங்களுக்கு கண் கண்ட தெய்வம். அவர்கள் உங்களை மேன்மைப்படுத்துவதற்குரிய அனைத்தையும் செய்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு நன்கு படித்து நல்ல நல்ல வேலையில் இருப்பதே ஆகும். இந்த உலகில் வாய்ப்புகள் என்பது கொட்டிக் கிடக்கிறது அதை நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரும்பும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறிச் செல்லுங்கள். மாணவ மாணவியர்கள் இன்றைய சூழலில் மிகுந்த கவனத்தோடும் ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறும் பட்சத்தில் அது உங்களுக்கு கேடை விளைவிக்க கூடும். இன்று இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக செல்போன் மூலமாக அதிகமான குற்றங்கள் நிகழ்கிறது. அதில் மாணவ மாணவியர்கள் சிக்கிக் கொள்ளாமல் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். உங்கள் கையில் இருக்கும் அலைபேசி நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்தவும். வழி தடுமாறினால் இன்று இல்லை எனினும் சில காலம் கழித்து கூட அது உங்களுக்கு தீமையை தரும். அதில் அதிகம் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். படிப்பு மட்டுமே உங்களை உயர்த்தும் அந்த படிப்பை சமூகத்திற்கு பயன்படும் படிப்பாக மாற்றுகிற கடமையும் பொறுப்பும் இன்றைய மாணவர்களுக்கு வேண்டும். அதுவே உங்கள் கல்வி நிறுவனத்திற்கும் உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெயர் பெற்ற தரும் என்று பேசினார்கள். இந்த விழாவில் செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், மீனாட்சிசுந்தரம், பிரபாகரன். முதல்வர்கள் முருகன், தவமணி, புவனேஸ்வரி துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக இயந்திரவியல் துறைத் தலைவர் தர்மர் நன்றியுரை கூறினார்.
Next Story

