பொத்தனூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி.

பொத்தனூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி.
X
பொத்தனூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பரமத்தி வேலூர், மார்ச். 22: நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் உபயோகம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரணிக்கு பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வேலூர் அரிமா சங்க தலைவர் சிவக்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் பிளாஸ்டிக் பொருட்கள் இனிவருங்காலங்களில் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி கொண்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பேரணி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரணி பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த நோட்டீஸ் மற்றும் துண்டுபிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது மக்கள் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் போது துணிப்பைகள் கொண்டு செல்லவும், தமிழக அரசின் அறிவிப்பின்படி மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Next Story