வெங்கரைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி.

வெங்கரைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி.
X
வெங்கரைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பரமத்தி வேலூர், மார்ச். 22: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரைப் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜி (எ ) விஜயகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி வெங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story