இராசிபுரம் கோனேரிப்பட்டியில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வடமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இராசிபுரம் கோனேரிப்பட்டியில்  கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வடமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
X
இராசிபுரம் கோனேரிப்பட்டியில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வடமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி பகுதியில் செல்வ விநாயகர், வட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதை முன்னிட்டு தினந்தோறும் கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவில் நிர்வாகம், பக்தர்கள் வழங்கிய 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வட மாரியம்மனுக்கு அலங்காரம் செய்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யும் பணியில், கோவில் அர்ச்சகர், பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். அதிகாலை அலங்காரம் செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story