வேலூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

X
Paramathi Velur King 24x7 |22 March 2025 8:37 PM ISTவேலூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,மார்ச் .21- பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை சாவடி அருகே தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. கொட்ட ப்பட்டிருந்த குப்பைகளை அகற்றிவிட்டு அந்த பகுதிகளை சீரமைத்து அங்கு மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்தும், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மூவேந்திர பாண்டியன் முன்னிலை வகித்தும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிழல் தரும் மரங்கள். தேவைப்படும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கோடைகாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட பேரூராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், ஜனார்த்தனன், தாமரைச்செல்வி மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாள ர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
