கடலூர்: புத்தக கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

கடலூர்: புத்தக கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைப்பு
X
கடலூரில் புத்தக கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கடலூர் மாவட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் மாபெரும் புத்தகத் திருவிழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வெ கணேசன் பங்கேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.  இந்த நிகழ்ச்சியில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ, ஐயப்பன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு ஐஏஎஸ், டி ஆர் ஓ, ஆர் டி ஓ மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story