மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம்.

X
அரியலூர், மார்ச் 22- மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டு ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாமக நகர செயலாளர் பரசுராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சமூகநீதி பேரவை தலைவரும், பாமக வழக்கறிஞருமான வக்கீல் பாலு, தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் ஸ்டீ ல்சதாசிவம், தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி, பாமக மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி திருமாவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி என்கின்ற ரவிசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர்.கூட்டத்தில் மாவட்ட தலைவர் அசோகன் மாணவரணி மாநில நிர்வாகி ஆளவந்தார், படை நிலை செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை,நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

