சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான சிறப்பு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று (22.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தெரிவித்ததாவது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண். W.A.1042/2018 மற்றும் CMP.No.8772/2018 வழக்கில் 03.08.2018 தேதியிட்ட உத்தரவில், காவல் சட்டம், சென்னை மாநகர காவல் சட்டம், நகர முனிசிபல் சட்டத்தின்படி பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம் நடத்துதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பொருட்டு பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம் நடத்துவற்கு பொதுவான இடம் தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அறிவுறுத்தல்களின்படி, பெரம்பலூர் மாவட்ட தலைநகரில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாவட்ட பேரணிகள், உண்ணாவிரதம், போராட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 100 நபர்கள் கலந்துகொள்ளும்படி இருந்தால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகிலும், 200 நபர்கள் கலந்துகொள்ளும்படி இருந்தால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலும், 200 முதல் 500 நபர்கள் கலந்துகொள்ளும்படி இருந்தால் வானொலிதிடலிலும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம், போராட்டங்கள் போன்றவற்றை உரிய முன்அனுமதி பெற்று நடத்தலாம். ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் அனுமதி கோரும்பட்சத்தில் முதலில் அனுமதி கோரியவருக்கு முன்னுரிமையளித்து அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர். மேற்சொன்ன இடங்களோடு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியிலும் உரிய இடத்தை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம்,பேராட்டங்கள் நடத்த அனுமதி தரவேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story



