ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்.

ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்.
X
திருவாரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என பல்வேறு வகையில் மாநிலங்களை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பொதுக்கூட்டம் தொடங்கியவுடன் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற உறுதிமொழியை திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வாசிக்க ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story