கல்லூரி மாணவி பேருந்தில் தவறவிட்ட லேப்டாப் போலீசார் நடவடிக்கையில் மீண்டும் ஒப்படைத்தனர்

X
அரியலூர், மார்ச்.23- ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி பேருந்தில் செல்லும் போது தவறவிட்ட லேப்டாப்பை போலீசார் கண்டுபிடித்து மீண்டும் மௌனவியிடம் ஒப்படைத்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாதாபுரம் முருகன் கொட்டாவை சேர்ந்த ஜான் பீட்டர் மகள் மௌனிகா. இவர் கும்பகோணம் பெண்கள் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாதா புறத்திலிருந்து கல்லாத்தூர் வந்து இறங்கி கல்லாத்தூரில் இருந்து நகரப் பேருந்து ஒன்றில் ஜெயங்கொண்டம் சென்றார். அப்போது தனது லேப்டாப் பையோடு தவறவிட்டு விட்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடன் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை செய்து நேற்றைய தினம் நடவடிக்கை எடுத்து கல்லூரி மாணவி தவறவிட்ட லேப்டாப் பையுடன் கண்டுபிடித்து அந்தப் பையை மீண்டும் மாணவி மௌனிகாவிடம் நேற்று ஒப்படைத்தார். உடன் மௌனிகாவின் தந்தை ஜான் பீட்டர் உடன் இருந்தார். மௌனிகாவின் தந்தை ஜான் பீட்டர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
Next Story

