கோவை: சிலிண்டர் விநியோகத்தில் ஊழல் - சுவரொட்டிகளால் பரபரப்பு

கோவை: சிலிண்டர் விநியோகத்தில் ஊழல் - சுவரொட்டிகளால் பரபரப்பு
X
சிலிண்டர் விநியோகத்தில் மெகா ஊழல் நடைபெறுவதாக கோவை முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல், ஒன்றிய அரசின் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் பெரும் ஊழல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார், இது கோவை முழுவதும் போஸ்டர்களாக அடித்து நேற்று ஒட்டப்பட்டுள்ளது. அவர் தெரிவித்துள்ளது தகவல்களின் படி, நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 30 லட்சம் சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.ஆனால், ஒவ்வொரு சிலிண்டர் விநியோகத்தின் போதும், நுகர்வோர்களிடம் இருந்து பில் தொகையை விட குறைந்தபட்சம் ரூ.30 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், ஒன்றிய அரசு ஒரு நாளைக்கு சுமார் ரூ.9 கோடி ஊழல் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.3200 கோடி வரை இந்த ஊழல் நடைபெறுவதாக அவர் மதிப்பிட்டுள்ளார். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை (ED) உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வே.கதிர்வேல் பெயரில் வெளியேற்றிருக்கும் இந்த போஸ்டர் குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story