கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடியில் நேற்று (மார்ச் .22) இரவு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாதது, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிக்க முயல்வது, தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்க முயலும் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மற்றும் தலைமை கழக பேச்சாளர் நாகர்கனி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றியம், பேரூர் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணி சார்பில் நிர்வாகிகள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story




