ஆலங்குளம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
X
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆ.மருதப்பபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் செல்லத்துரை (50). குறிப்பன்குளத்தில் உள்ள பழைய இரும்புக் கடையில் வேலை செய்துவந்த அவா் ஆலங்குளத்துக்கு வந்துவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது குறிப்பன்குளம் - மருதப்பபுரம் சாலையில் உள்ள பாலத்தில் நெல்லைக் கொட்டி தாா்ப்பாயால் மூடி, அதன் மீது வைக்கப்பட்டிருந்த கல்லில் பைக் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த செல்லத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story