சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:போலீசார் விசாரணை

X
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா், காந்தி சாலையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சமுத்திரம் (36) என்பவரின் கடையில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து சமுத்திரத்தை கைது செய்தனா்.
Next Story

