ராமநாதபுரம் பாம்பன்ரயில் பாலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
பாம்பன் கடலில் புதிதாக ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு கட்டுமான பணிகள் 100% நிறைவடைந்துள்ளது. புதிய ரயில் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முடிந்தும் பிரதமரின் வருகைக்காக திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளதையடுத்து குறித்து ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே உதவி பொது மேலாளர் கௌசல் கிஷோர் தலைமையிலான ரயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் விரிவான ஏற்பாடுகள் குறித்தும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதால் அந்த இடம், பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் இடம், குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரயில்வே பொது மேலாளர் கௌசல் கிஷார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ உள்ளிட்டோர் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் உடன் இந்த விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது
Next Story



