பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிடுக! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை

X
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிடுக! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை தி.மு.கழகத்தின் அறிவிப்பிற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்ப்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று கழகத்தினருக்கு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோள் வருமாறு, தி.மு.கழகத்தின் அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய,நகர, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களிலும்,பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கொடிக்கம்பளின் விவரங்களை மாவட்டக் கழகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

