சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
X
அருள் எம்எல்ஏ தலைமையில் நடந்தது
சேலம் மாநகர் மாவட்டம் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று காலை இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் சேலம் மாநாட்டு குழு பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.எல்.இளவழகன் பேசும் போது,‘சென்னை மாமல்லபுரத்தில் மே மாதம் 11-ந் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு சேலம் மாநகர் மாவட்டத்தில் ஆயிரம் வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பசுமை தாயகம் மாநில இணைச்செயலாளர் சத்திரியசேகர், மாவட்ட அமைப்பு தலைவர் வக்கீல் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ஆறுமுகம், வன்னியர் சங்க செயலாளர் ஆர்.கே.சிவா, மாவட்ட துணைச்செயலாளர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story