ஊட்டுக்கால்வாய் சீரழிப்பு பணி அமைச்சர் மு.பே.சாமிநாதன் துவக்கி வைத்தார்

ஊட்டுக்கால்வாய் சீரழிப்பு பணி அமைச்சர் மு.பே.சாமிநாதன் துவக்கி வைத்தார்
X
ரூ.2 1/2 கோடியில் ஊட்டுக்கால்வாய் சீரழிப்பு பணி அமைச்சர் மு.பே.சாமிநாதன் துவக்கி வைத்தார்
முத்தூர் அருகே தொட்டியபாளையத்தில் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் திட்டத்தின் கீழ் நீர்வளத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஊட்டுக்கால்வாய் புதிதாக புனரமைக்கப்பட்டு சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோ.மலர்விழி தலைமை தாங்கினார். முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம் பாலு முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு புதிய ஊட்டுக் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் முத்தூர் பேரூராட்சி மோளக்கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள நாவிதன் கரை நீரோடையின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பது, அதன் அருகில் உள்ள கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பற்றி நேரில் ஆய்வு மேற் கொண்டார். நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் ராசி முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், பேரூராட்சி துணைத் தலைவர் மு.க.அப்பு, செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி பொறியாளர்கள் சதீஸ்வரன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story